Sunday, March 19, 2017

அர்த்தம்








கடற்கறைச் சாலை
ஞாயிறு மாலை


நகர நரக பிடியிலிருந்து
விடுபட்ட
தற்காலிக சுதந்திரத்தை அனுபவித்து
மீண்டும் நரகம் நோக்கி
சீரிப்பாயும் கார்கள்


முடிவில்லா காரிருள் பிரபஞ்சத்தில்
சுழன்று கொண்டிருக்கும்
கோடானு கோடி
துகள்கள் ஒன்றின்மேல் உழன்று கொண்டிருக்கும்
வாழ்வின் அர்த்தத்தை எண்ணி
தாடி சொரிந்து நான்


எந்த பிரக்ஞ்சையுமற்று
கடற்காற்றின் சுகத்தில்
துள்ளி குதித்து விளையாடும்
தெரு நாய்


- புத்தன் ராஜரத்தினம்


Tuesday, March 7, 2017

சிறு கதை


                                                       சிவப்பு ரோஜா


பிப் 14, காதலர் தினம்.

நேற்றிலிருந்தே ஒரு விபரீதமான  எண்ணம். இந்த வருடமாவது  இச்சிறப்பு நாளை கொண்டாடியே தீர்வது , காதல் பரிசு கொடுத்து விடுவது  , என்பதே அது.






முதலில் அபத்தமாக தோன்றினாலும் நேரம் போகப் போக இதில் என்ன தப்பு. இந்த உலகில் மிக இனிமையான, அற்புதமான உணர்வு காதல். அதற்காக ஒரு நாளை தேர்வு செய்து கொண்டாடுவதில் என்ன தவறு? இது ஒரு மொழி, இனம் ,கலாச்சரம் கடந்த கொண்டாட்டம் . இப்படிப்பட்ட ஒரு சுவையான நினைவுச் சுழலில் சிக்கி அடி ஆழம் இழுத்து செல்லப் பட்டேன்.

காதல் திருமணம் செய்திருந்தாலும் , எல்லாரையும் போலவே '' என்ன nonsense - valentine day , நம்ம பண்பாட்டுக்கு ஏற்றதல்ல இது ''
என்று சப்பை கட்டு காரணத்தையே பத்து ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி சொல்லி தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டாகிவிட்டாயிற்று .

இப்பொழுது திடீ ரென்று பரிசு வாங்கி சென்றால் ,மன  நலம் பாதிக்க பட்டவனை பார்ப்பது போல் பார்ப்பாள் , மனைவி . இல்லையென்றால் இதை  ஏதோ பெரிய குற்றத்தை மறைக்க செய்யும் சிறு தந்திரமாக, சந்தேகத்துடன் பார்ப்பாள் .எப்படி இருந்தாலும் சிறிது நேரத்தில் உண்மை அறிந்து மகிழ்சி உண்டாகும். இது ஒரு மறக்க முடியாத நாளாகிவிடும். மறுபடியும் அதே சுவையான சுழல் !

அதைப்பற்றிய நினைப்பே மனதை இளமையாக்கியது. உற்சாகமும் பரபரப்பும் கூடிக்கொண்டது.

என்ன பரிசு வாங்குவது ?

நகை , டிரஸ், கிரீட்டிங் கார்டு ......? ??

இது எல்லாமே old fashion ஆக தோன்றியது. புதுமையாக என்ன  செய்யலாம்?

candle light dinner ? movie ?? இதிலெல்லாம் surprise element குறைந்துவிடுமே ?

ஏற்கனவே தமிழ் நாட்டு அரசியல் பரபரப்பால் கசங்கி போன மூளையை மீண்டும் கசக்க எத்தனிக்கும் பொது ...

''என்ன பரிசு தருகிறோம் என்பது முக்கியமல்ல , பரிசு தருகிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம் '' என்ற ஸ்வாமி காதலானந்தாவின் அறிவுரை நினைவுக்கு வந்தது.

online ல் பூங் கொத்து ஆர்டர் செய்து , surprise delivery செய்தால்  எப்படி இருக்கும் ?

அவசர அவசரமாக அருகிலுள்ள online flower shops களை google ல் தேடினேன். ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் ஆர்டர் செய்ய இயலவில்லை .

மறுநாளும் வந்தது.

காதலர்தினம் சூடான எலும்பை உடைய செய்யும் (Breaking News !) செய்திகளால் அரசியல்  தினமாக பரபரப்பாக கழிந்தது. வேலை பளுவில் மாலை வரை நினைவே இல்லை. வீட்டுக்கு திரும்ப தயாராகும் நேரத்தில்தான் மறுபடியும் அந்த இனிப்பான சுழல் நினைவுக்கு வந்தது.

அடுத்த அரைமணிநேரத்தில் பெசன்ட் நகரிலுள்ள ஒரு பூக்கடையில் நான்.

கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது. நிறைய இளைஞி , இளைஞர்கள் . தயக்கமும் வயதாகிவிட்டதே என்ற தாழ்வுமனப்பான்மையும் மனதின் ஓரத்தில் முளை விட்டாலும் , இப்போதாவது வந்தோமே என்று அவற்றை ஓரங்கட்டினேன்.

வித வித மான பலநிற பூக்கள் மகிழ்சியுடன் புன்னகைத்தன .

அதிக குழப்பமில்லாமல் சிவப்பு கலர் ரோஜாப்பூங் கொத்தை காதலின் சின்னமாக தேர்ந்தெடுத்தேன்.

சரியாக மனைவியிடமிருந்து போன் ''எப்போ வருவீங்க , எவ்வளவு நேரமாகும்'' என்று.

ஊகி த் து விட்டா ளோ ?

சே சே ...வாய்ப்பே இல்லை ... என நினைத்துக்கொண்டே '' கொஞ்சம் லேட் ஆயிடுச்ச்சு , அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் '' என போனை துண்டித்தேன்.

முதல் காதல் பூத்த இளைஞனைப் போல நெஞ்சின் துடிப்பு வேகமெடுத்து வீட்டை நோக்கி பயணமானேன்.

வழி நெடுக பூங்கொத்தை கொடுத்தவுடன் அவளின் response எப்படி இருக்கும்? என்று ஒரு 50, 100 விதங்களில் கற்பனை செய்து பார்த்தேன். இருந்தாலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த சஸ்பென்ஸ் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகமாக்கியது.

வீடு வந்துவிட்டது.

பூங்கொத்தை கையில் தூக்கி பிடித்தபடி நடந்தேன், புன்முறுவலை மறைக்க இயலாமல்.

டிங் ...டிங் ....டிங் .

அழிப்பு மணியை அமுக்கினேன், வழக்கத்திற்கு மாறாக. (என்னிடம் உள்ள இரண்டாவது சாவியால் வீட்டை திறப்பதுதான் வழக்கம். )

உச்சகட்ட காட்சியை காணும் ரசிகனா க , இருதய துடிப்பு தாறுமாறாகியது.


மனைவி கதவை திறந்தாள் .


சிரித்த முகத்துடன் ஆர்வமாக ,அவள் முகத்தின் உணர்ச்சியை படிக்க முயற்சித்தேன் .

நான் கற்பனை செய்த்த 100 விதங்களிலிருந்தும் முற்றிலும் வேறாக இருந்தது அவள் முகம்.

அதிர்ச்சியா???

கோபமா???

ஏதாவது தப்பு செய்து விட்டேனா?

பலவாறு யோசித்து குழப்பத்தில் ...."Happy Valentine 's day " என்று சொல்ல சில வினாடிகள் தாமதித்து விட்டேன் .

அதற்க்குள் கோபத்துடன் ஒரு கூச்சல் அவளிடமிருந்து  .


" கல்யாணமான ஆம்பளைன்னு கூட தெரியாம யாரு உங்களுக்கு Red Rose கொடுத்தது "


Red Rose ஏ தோற்க்கும் அளவிற்கு கோபத்தில் சிவந்தது அவள் முகம்.



- புத்தன் ராஜரத்தினம் .



Monday, December 12, 2016

போலி







தொடர்ந்து
களைப்பில்லாமல்
ஒன்றன் பின் ஒன்றாக
நம்மைப் பற்றிய
பிம்பத்தை உருவாக்க முயல்கிறோம்.


வீட்டில்
வேலை செய்யுமிடத்தில்
பொது வெளியில்
Face  book  ல்
WhatsApp ல்
இந்த ஓட்டம் தொடர்கிறது.

காலப்போக்கில்
நிஜத்தை இழந்து
நிழலாக வாழ்ந்து மறைகிறோம் .








Monday, January 4, 2016

சிக்னல் சொல்லும்/செய்யும் கதைகள்

பத்தி 


தைகள் நிறைந்த தேசம் , எங்கள் தேசம் !

நம் இந்தியா, ஒரு சுவராஸ்யம் மிகுந்த நாடு - A very happening place .  பல மதங்கள்,மொழிகள் , கலாச்சாரங்கள் ஒன்றாக சங்கமிக்கும் பெருங்கடல். ஒவ்வொரு தெருவிலும் , வீட்டிலும் ஆயிரம் கதைகளுண்டு இங்கே. அவை வரிசையில் நின்று தன்னைப்பற்றி எழுதச்சொல்லி , எழுத்தாளனிடம் கை ஏந்தி கெஞ்சும்.கதா ஆசிரியனுக்கான கோடானு கோடி கதைக்கருக்கள் , அமாவசை வானில் தூவப்பட்ட நட்சத்திரங்களாக எங்கும் வியாபித்திருக்கும்.

இதை நன்கு உணர்ததால்தானோ என்னவோ, Canadian writer Yann Martel இந்தியாவிற்கு  வந்து life of pie யை படைத்தார்.


தினமும் நாற்பது கிலோமீட்டர் இந்த concrete jungle லில் பயணிப்பதாலோ என்னவோ , நம்முடைய traffic மற்றும்  road sense ன் மேல் எனக்கு ஒரு தீராக்  காதல்.

அடையாரில் எங்கள் மருத்துவமனைக்கு அருகில் , ஒரு அபாயகரமான  road junction உள்ளது. அடிக்கடி பாத சாரிகள் அடிபட்டு தலைக்காயத்துடன் மருத்துவமனைக்கு வருவது வழக்கம். அதைப் பார்க்கும்போது ,இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்கும் போதுகூட helmet அணிய வேண்டிவருமோ ? என்ற ஐயம் தோன்றும் எனக்கு.

சில மாதங்களுக்கு முன்பு , இப்படித்தான் ,ஒரு இளம் பெண் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கல்லூரி படிப்பு முடித்துவிட்டு , வேலையில் புதிதாக சேர்ந்த அவர் , தன்னுடைய அப்பா, அம்மா, மற்றும்  தங்கையுடன் தன் சந்தோஷத்தை உணவு விடுதியில் கொண்டாடிவிட்டு  ரோடை கிராஸ் செய்திருக்கிறார். கிராமத்திலிருந்து வந்த பெற்றோரை ரோட்டிற்கு அந்தப்புறம்  விட்டு விட்டு , தங்கையை கூடிவர சென்ற பொது , வேகமாக வந்த two  wheeler ஆல் , தூக்கி எறியப்பட்டார். மோட்டார் பைக் நிற்காமல் சென்றுவிட்டது- hit and run .மூளையில்  அடிபட்டதில்  செயலிழந்து விட்டது - brain  death . ஒரு கணத்தில் சிதறியது அக்குடும்பத்தின் கனவு.பெற்றோர்,அவளின்  உடல் உறுப்புகளை தானமிட்டு சென்றனர்.

சில நாட்களுக்கு பிறகு, முதன் முறையாக அந்த இடத்தில் ஒரு traffic signal ம், ஸ்பீட் breaker ம் போடப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.



ரிரண்டு நாட்களுக்குப்பிறகு ,அதே இடத்திலிருந்து ஒரு வயதான தம்பதி பைக்கிலிருந்து கீழே விழுந்து மூளை ரத்தக்கட்டியுடன் வந்தனர். காரணம் என்னவென்றால் , speed breaker க்கு வெள்ளை paint அடிக்கவில்லை. sign board ஐ  எதிர்பார்பதெல்லாம் ரொம்ப அதிகம். சட்டென்று தெரிந்த speed breaker ஆல் தடுமாறி கீழே விழுந்தனர்.

அடுத்த நாள்  speed breakerக்கு வெள்ளை  paint அடிக்கப் பட்டது.


போன வாரத்தில் , Theosophical society க்கு வந்த , ஒரு அமெரிக்க பெண்மணி MTC பஸ்ஸில் அடிபட்டு , விலா எலும்பு முறிந்து வந்தார். நல்ல படியாக தலைக்காயம் ஏதும் இல்லை. ஓரிரு நாட்களில் நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய ஊருக்கு சென்று விட்டார்.

 நேற்று காலை Besant nagar avenue ரோட்டில்  பயணிக்கும்போதுதான்  புரிந்தது, accident நடந்த இடம் எதுவென்று. Theosophical Society Basant Nagar கேட்டுக்கு எதிரில் புதிதாக ஒரு  traffic signal !
காலை ஐந்து மணி . ஆளில்லா சாலையில்,traffic சிக்னல் கடமை தவறாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தது. vrooom என்று ஒரு Ducati பைக் சிவப்பை மதிக்காமல் சீறி சென்றது.

எங்கள் தேசம் போல ஒரு தேசம் உண்டா இப்பூவுலகில்.

இங்கு, ஒவ்வொரு traffic சிக்னலுக்கு பின்னும், ஒவ்வொரு speed breaker க்கு பின்னும் கூட ஆயிரம் கதைகளுண்டு.



புத்தன் ராஜரத்தினம்,
04-01-16.