அடர்ந்த காடு.
அமேசான் காடுகளை National Geography ல் பார்த்திருப்பீர்களே, அதைப்போல ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நான் அந்த காட்டிற்குள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன். ஏன்???....
ஏன் ,கேட்க மாட்டீர்கள், புலி துரத்தினால் ஓடாமல் என்ன செய்வது!
நான் ஏன் தனியாக வந்து இப்படி மாட்டிக்கொண்டேன்?
ஒரே குழப்பமாக இருந்தது.
என்னுடைய வேகம் எனேக்கே ஆச்சரியமாக இருந்தது. மூச்சு வாங்கவில்லை. ஆனால், எனக்கும் அந்த விலங்குக்கும் உள்ள தூரம் குறைந்துகொண்டே வந்தது. வேகத்தை இன்னும் அதிகரிக்க முயற்சிக்கும்போது , ஒரு மரத்தின் வேர் தடுக்கி , இலைகள் சரசரக்க தரைமீது மல்லாக்க விழுந்தேன். புலி என்மீது பாஆஆய்ய்ய்..........யாரோ freeze பட்டனை அமுக்கியதைப்போல அப்படியே அந்தரத்தில் நின்றது புலி. நான் மல்லாக்க இருந்தபடியே நகர முயற்சிக்கிறேன். ஒரு சிறு அசைவு கூட செய்ய இயலவில்லை. வேறு வழியில்லை. இனி தப்பிக்க முடியாது. சாகப்போகிறேன். உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாகும் தருணத்தில் , நம் முழு வாழ்க்கையையும், ஒரு flash போல, ஒரு கணத்தில் short film ஆக High Definition ல் பார்க்க முடிகிறது. நெஞ்சு படபடவென்று அடித்தது.வேர்த்து கொட்டியது .
திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து விழித்தேன்.

power cut ஆகியிருந்தது.
அப்பாடா! சாகவில்லை !
மறுவாழ்வு கிடைத்த சந்தோசம். அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
இரவா , பகலா ? நான் இருப்பது கிராமத்திலா, சென்னையிலா ? வீட்டிலா, hotel லிலா ?- hang ஆன மூளை நல்லவேளை slow வாக boot ஆகிவிட்டது. பெயரும் மற்ற விவரங்களும் மறக்கவில்லை.
படுக்கை அறையை விட்டு வெளியே வந்ததும் தான் இருட்ட ஆரம்பத்திருந்தது தெரிந்தது .
ஞாயிற்றுக்கிழமை.
சாயந்திரம் ஆறு மணியிருக்கும். மனைவி மும்பை சென்றிருக்கிறாள். மாமனாருக்கு இருதய பைபாஸ் ஆபரேஷன் முடிந்து ஒரு மாதமாக இங்குதான் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் , தன் அக்காவின் வீட்டில் அவரை ஓய்வெடுக்க விட்டு வர த்தான் மும்பை பயணம்.
நீண்ட நாளைக்கப்புறம் கிடைத்த தற்காலிக சுதந்திரத்தை முழுவதுமாக அனுபவித்தேன் . நினைத்த நேரத்தில் சாப்பாடு, உறக்கம் மற்றும் வேண்டும்போது உரக்க ஒலிக்கும் இசை என்று ஒரு நீண்ட பட்டியல்.
ஆனாலும் இரண்டு நாட்களில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
இரவு 11 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறாள். சென்று அழைத்து வர வேண்டும்.9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
பசித்தது. சாப்பிட பழங்களைத்தவிர ஒன்றுமில்லை.
fridge லிருந்து எடுத்த apple லை சிறுது நேரம் வெறித்து பார்த்தபடி இருந்தேன்.
ஜூன் மாத வெக்கையில் அதற்க்கும் வேர்க்க ஆரம்பித்திருந்தது! ஒருவேளை கையிலிருந்த கத்தியைப் பார்த்து பயந்திருக்குமோ?!
சட்டென்று திரும்ப வந்த கரண்ட் , ஒளி வெள்ளத்தால் ஒரு கணம் திடுக்கிட வைத்துவிட்டது.
என்னவென்றே தெரியாமல் மனதில் ஒருவித பயம்,படபடப்பு சூழ்ந்து கொண்டது -அந்த கெட்ட கனவின் தொடர்ச்சியாக. பல சமயங்களில் இந்த மாதிரி தோன்றும்போது , எதாவது அசம்பாவிதம் நடப்பது நினைவுக்கு வந்து தொலைத்தது.
9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு காரை நோக்கி நடந்தேன்.
தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பித்திருந்தது . வேகமாக வீசிய காற்றில் மண்வாசனையுடன் , தூசும், குப்பை காகிதங்களும் மிதந்து கொண்டிருந்தன.
காற்று சற்று குளிராக இருந்தது. அருகில் எங்கோ மழை.
என்னுடைய சிறிய தனி வீட்டிற்கு எதிரில் பூதமாக நின்ற , அந்த புது 11 அடுக்கு குடியிருப்பு கட்டிட வேலை முடியும் தருவாயில் இருந்தது. இதை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலும் கோபமும் வந்தது. நான் வசிக்கும் இந்த சென்னை புறநகரில் நான்கு அடுக்குக்கு மேல் கட்ட அனுமதி இல்லை. யாரைப்பிடித்து லஞ்சம் தந்து அனுமதி வாங்கினார்கள் என்று தெரிய வில்லை.
எதுவும் தப்பாக நடந்துவிடக்கூடாதே என்ற எச்செரிக்கையுடன் மெதுவாக , வெகு கவனமாக காரை செலுத்தினேன்.
போரூருக்கு அருகில் ஒரு தெருவில் , நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு ஓலமிட்டுக்கொண்டிருந்தது . வீதியில் யாருமில்லை . ஏதோ செவ்வாய் கிரகத்தில் பயணிப்பதாக உணர்வு .சமீபத்தில் படித்த "உப்புநாய்கள்" நாவல் ஞாபகத்திற்க்கு வந்தது. அதில் நயைக்கொன்று அதை கோழிக் கறி என்று உணவு விடுதிகளுக்கு விற்பார்கள். குமட்டலாக வந்தது.அந்த நாவலைப் படித்ததிலிருந்து non veg ஐ restaurant களில் தவிர்த்தேன் .
கசப்பான நினைவுகளிளுருந்து மனதை திசை திருப்ப ராஜாவின் பாடலை ஆன் செய்தேன் .
கிண்டியை நெருங்கும்போது தூறல் ஆரம்பித்திருந்தது.
10 மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டை நெருங்கிவிட்டேன்.
இன்னும் ஒரு மணி நேரம்.
ஏர்போர்டிற்கு உள்ளே சென்றால் hefty பார்கிங் fee - 5 நிமிடத்தில் வெளியே வராவிட்டால். மிடில் கிளாஸ் mentality தீவிரமாக யோசித்து ஒரு ஐடியா தந்தது.
ஏர்போர்ட் ரோடில் Radisson Blue க்கு அருகில் வண்டியை ஓரங்கட்டினேன். மனைவி ஏர்போர்ட் arrival pick up இட த்திற்கு வந்தப்புறம் , செல்வதாக plan. அவனைப்போலவே நிறைய taxi கள் பார்க்கிங் fee ஐ தவிர்க்க நின்றுகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
சிறிது நேரத்தில் , அதைப் பொறுக்க முடியாமல் குச்சான்கள்(police ) , "no parking ...வண்டிய எடு " என்று அவர்களுக்கு தெரிந்த மிக மரியாதையான மொழியில் மிரட்டினர் .
மெதுவாக நகர்ந்தேன்.
Trident Hotel ஐ தாண்டியதும் இடதுபுறம் நங்கநல்லூர் செல்லும் சிறிய சந்து தெரிந்தது. அங்கு police வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் வண்டியை திருப்பினேன்.
ரோடோரத்தில் நிறுத்தி லைட் டை அணைத்தேன்.
என்ஜின் ஓசை நின்றதும்தான், அந்த மனதை கிலியூட்டும் அமைதியை உணர முடிந்தது.
டப்...டப்...டப்.... என்று மெதுவாக தாள லயத்துடன் மழைத்துளிகள் காரின் கூரை மீது நடனமாடிக்கொண்டிருந்தது.
ஒரு வேளை , எதாவது adventure or thrill ஆக நடக்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்த மாதிரி தேவை இல்லாத விஷயங்களை செய்கிறேனோ? என் மீதே சந்தேகம் வந்தது.
கண்ணுக்கு தெரிந்தவரை ஆள் நடமாட்டமில்லை.
பணத்திற்காக தாக்கப்படலாம்.
திடீரென்று pizza படத்தில் வருவது போல மோகினி பிசாசு எதாவது வருமோ?
இங்கு நிற்காதே என்று உள்ளுணர்வு சொல்லியது. வண்டியை எடுக்கலாமா என்று யோசித்தபொழுது, ஒருவன் டூ வீலரை தள்ளிக்கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும் , காரின் உள்ளே நோட்டமிட்டான். நெஞ்சு மறுபடியும் பட பட வென்று அடிக்க ஆரம்பித்தது.
ஜன்னலில் knock செய்து ஏதோ சைகை செய்தான்.
திறக்கலாமா ? வேண்டாமா?
பயத்துடன் காரின் ஜன்னலில் ஒரு பகுதியை திறந்தேன்.
"airport க்கு எப்படி போனும்?....மழையில வண்டி வேற மக்கராய்டுச்சு "
அதைக்கேட்டதும் கொஞ்சம் தைரியம் வந்து முழு ஜன்னலையும் திறந்தேன்.
"நேரா போயி...left ல திரும்புங்க....ரெண்டு கிலோமீட்டர் ல ஏர்போர்ட்
வந்துரும் " வலுக்கட்டாயமான புன்னகையால் பயத்தை மறைத்தேன்.
நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிட்டான்.
மனம் நிம்மதியடைந்தாலும் , உங்களைப்போலவே எனக்கும் எதிர்பார்த்த twist இல்லாமல் சப் பென்று ஆகிவிட்டது.
சிறிது நேரத்தில், ஆசிரியர் வெளியே சென்றதும் பள்ளி மாணவர்களின் அமைதி மாறி சலலப்பு , கூச்சலாகுமே , அதைப்போல மழை சத்தத்தின் ஆரவாரம் அதிகமானது- ஹோ என்ற இரைச்சலுடன் .
11 மணியாகிவிட்டது. கால் ஒன்றும் வரவில்லை.
விமானத்தின் பாதுகாப்பான தரையிரங்களைப் பற்றிய அடுத்த பயம் தொற்றிக்கொண்டது.
இன்று , அந்த கெட்ட கனவிற்கு அப்புறம் நடப்பது எதுவுமே சரியாக தோன்றவில்லை.
வழக்கம் போல எதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ??
நேரம் செல்ல செல்ல பட பட ப்பு கூடிக்கொண்டே போனது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இஷ்ட தெய்வங்களை பிரார்தித்துக்கொண்டேன் .
12 மணியாகிவிட்டது. மழையும் விட்ட பாடில்லை.
டிருங் ....டிருங் ....டிருங் ....
மொபைல் ரிங் டோன் கூட திடிக்கிட செய்தது.
மனைவியிடமிருந்து போன்.
மழையால் லேன்டிங் தாமதம் .
நிம்மதிபெருமூச்சுடன் வண்டியை கிளப்பினேன்.
"rough landing.... bad day " வீட்டிற்கு திரும்பும்பொழுது மனைவி சொல்லிகொண்டிருந்தாள் .
நான் கமுக்கமாக , எனக்கு நேர்ந்த பயத்தையும் பட பட பையும் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தேன்.
மறுபடியும் வெகு கவனமாக வண்டி ஓட்டினேன்.
இன்னும் சிறிது தூரம்தான். எதுவும் நடக்கக்கூடாது .
marathon ன் கடைசி சில மைல்களை கடப்பது போல நிமிடங்கள் சென்றன.
finish line ஐ தொடும் ஆர்வத்தில் இருந்தேன்.
ஆனால்......
வீட்டை நெருங்கியதும், அந்த வீதி வழக்கித்திற்க்கு மாறாக ,ஏதோ பெரிய இடர்பாடு நடந்த இடம் போல இருந்தது.
அழுகை , கூச்சல் மற்றும் siren களுடன் தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலென்ஸ்களும் - அச்சத்தை உண்டாக்கின.
வண்டியை விட்டு இறங்கி , மனித குமபலுக்கிடையில் ஊடுருவினேன்.
அங்கே நான் கண்ட காட்சி.....
அந்த 11 அடுக்கு மாடி குடியிருப்பு என் வீட்டின் மேல் விழுந்து தரை மட்டமாயிருந்தது . என் வீடு இருந்த இடம் மண் குவியலாக ஒரு சிறு குன்று போல் காட்சியளித்தது.
புத்தன் ராஜரத்தினம் ,
13-12-2005.