பத்தி
கதைகள் நிறைந்த தேசம் , எங்கள் தேசம் !
கதைகள் நிறைந்த தேசம் , எங்கள் தேசம் !
இதை நன்கு உணர்ததால்தானோ என்னவோ, Canadian writer Yann Martel இந்தியாவிற்கு வந்து life of pie யை படைத்தார்.
தினமும் நாற்பது கிலோமீட்டர் இந்த concrete jungle லில் பயணிப்பதாலோ என்னவோ , நம்முடைய traffic மற்றும் road sense ன் மேல் எனக்கு ஒரு தீராக் காதல்.
அடையாரில் எங்கள் மருத்துவமனைக்கு அருகில் , ஒரு அபாயகரமான road junction உள்ளது. அடிக்கடி பாத சாரிகள் அடிபட்டு தலைக்காயத்துடன் மருத்துவமனைக்கு வருவது வழக்கம். அதைப் பார்க்கும்போது ,இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்கும் போதுகூட helmet அணிய வேண்டிவருமோ ? என்ற ஐயம் தோன்றும் எனக்கு.
சில மாதங்களுக்கு முன்பு , இப்படித்தான் ,ஒரு இளம் பெண் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கல்லூரி படிப்பு முடித்துவிட்டு , வேலையில் புதிதாக சேர்ந்த அவர் , தன்னுடைய அப்பா, அம்மா, மற்றும் தங்கையுடன் தன் சந்தோஷத்தை உணவு விடுதியில் கொண்டாடிவிட்டு ரோடை கிராஸ் செய்திருக்கிறார். கிராமத்திலிருந்து வந்த பெற்றோரை ரோட்டிற்கு அந்தப்புறம் விட்டு விட்டு , தங்கையை கூடிவர சென்ற பொது , வேகமாக வந்த two wheeler ஆல் , தூக்கி எறியப்பட்டார். மோட்டார் பைக் நிற்காமல் சென்றுவிட்டது- hit and run .மூளையில் அடிபட்டதில் செயலிழந்து விட்டது - brain death . ஒரு கணத்தில் சிதறியது அக்குடும்பத்தின் கனவு.பெற்றோர்,அவளின் உடல் உறுப்புகளை தானமிட்டு சென்றனர்.
சில நாட்களுக்கு பிறகு, முதன் முறையாக அந்த இடத்தில் ஒரு traffic signal ம், ஸ்பீட் breaker ம் போடப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
ஓரிரண்டு நாட்களுக்குப்பிறகு ,அதே இடத்திலிருந்து ஒரு வயதான தம்பதி பைக்கிலிருந்து கீழே விழுந்து மூளை ரத்தக்கட்டியுடன் வந்தனர். காரணம் என்னவென்றால் , speed breaker க்கு வெள்ளை paint அடிக்கவில்லை. sign board ஐ எதிர்பார்பதெல்லாம் ரொம்ப அதிகம். சட்டென்று தெரிந்த speed breaker ஆல் தடுமாறி கீழே விழுந்தனர்.
அடுத்த நாள் speed breakerக்கு வெள்ளை paint அடிக்கப் பட்டது.
புத்தன் ராஜரத்தினம்,
04-01-16.
போன வாரத்தில் , Theosophical society க்கு வந்த , ஒரு அமெரிக்க பெண்மணி MTC பஸ்ஸில் அடிபட்டு , விலா எலும்பு முறிந்து வந்தார். நல்ல படியாக தலைக்காயம் ஏதும் இல்லை. ஓரிரு நாட்களில் நன்றி சொல்லிவிட்டு தன்னுடைய ஊருக்கு சென்று விட்டார்.
நேற்று காலை Besant nagar avenue ரோட்டில் பயணிக்கும்போதுதான் புரிந்தது, accident நடந்த இடம் எதுவென்று. Theosophical Society Basant Nagar கேட்டுக்கு எதிரில் புதிதாக ஒரு traffic signal !
காலை ஐந்து மணி . ஆளில்லா சாலையில்,traffic சிக்னல் கடமை தவறாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தது. vrooom என்று ஒரு Ducati பைக் சிவப்பை மதிக்காமல் சீறி சென்றது.
எங்கள் தேசம் போல ஒரு தேசம் உண்டா இப்பூவுலகில்.
காலை ஐந்து மணி . ஆளில்லா சாலையில்,traffic சிக்னல் கடமை தவறாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தது. vrooom என்று ஒரு Ducati பைக் சிவப்பை மதிக்காமல் சீறி சென்றது.
எங்கள் தேசம் போல ஒரு தேசம் உண்டா இப்பூவுலகில்.
இங்கு, ஒவ்வொரு traffic சிக்னலுக்கு பின்னும், ஒவ்வொரு speed breaker க்கு பின்னும் கூட ஆயிரம் கதைகளுண்டு.
புத்தன் ராஜரத்தினம்,
04-01-16.