Thursday, April 6, 2017

                                                                 கால்கள்







கால்களின் அருமை
புரிவதில்லை நமக்கு .

எவ்வளவு பாரத்தை சுமந்தாலும்
எவ்வளவு தூரத்தை கடந்தாலும்
எவ்வளவு அசிங்கத்தை சகித்தாலும்

ஒன்றுமில்லாமல்

கால்கள் கால்களாகவே
வாழ்ந்து மடிகின்றன .



ஒன்றுமேயில்லாவிட்டாலும்

உயரத்தில் ஓசி சவாரி செய்யும்
சிகைக்குத்தான்
பாராட்டும் கிரீடமும் .



- புத்தன் ராஜரத்தினம்
   06-04-17

No comments:

Post a Comment