- வாடா போடா நண்பர்கள்
"டேய் போதும் ...வாய மூடு"
"பொத்துடா"
"போடாக் கே...**#%"
"நீ என்ன பெரிய பருப்பா"
"ஓவரா படம் காட்டாதடா"
முப்பது வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்துச்செல்லும் உரையாடல்கள். சிலர் சாமியார்கள் கையில் விளக்குமாறைக் கொடுத்து அடிவாங்கி புண்ணியம் பெறுவார்கள். அதைப்போல எங்களுக்கு இப்படி வசைபாட்டை கேட்பதில் ஒரு ஆனந்தம்.
பதவி, பணம் , சமுதாய அந்தஸ்து என்ற போலிகளை களைத்து உண்மையான முகம் நோக்கி பேசும் நட்பு. UG கல்லூரிக்குப்பின்னர் இப்படிப்பட்ட நட்பு அமைவதில்லை.
ஆனால் ஏதோ காரணங்களால் இந்த சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வதில்லை. "இனி வருடம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்" என்ற வழக்கமான உறுதிமொழியை இம்முறையும் தவறாமல் எடுத்துக்கொண்டோம். மீதம் இருப்பது குறைவான வருடங்களே என்ற உண்மையை உணர்ந்தாவது இது அடிக்கடி நிகழ வாழ்த்துவோம். இதற்க்கு Mr Bond , The BOSS முரளியின் ஆசியும் கிடைக்கும் என நம்புவோம்.
2. பின்னோக்கி செல்லும் time machine ஆன Sadhapdi Express
வழக்கத்திற்க்கு மாறாக
ஐந்து மணிக்கு விழித்து,
ola வில் Mini Taxi யை book செய்ய முயன்று,
வழக்கம் போல் ட்ரைவர்கள்
அதை cancel செய்து,
வழக்கம் போல் நேரம் விரயமாகி,
train க்கு தாமதமாகிவிடுமே என்று பதைபதைத்து,
அவசரமாக ஆட்டோவில் சென்னை சென்ட்ரலுக்கு சென்று சேர்ந்தேன்( 😤இந்த வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்து அலுத்து விட்டது!).
Train ல் கிடைக்கும் கலவரமான காலை உணவுக்கு பயந்து A2B யில் இட்லி வாங்க நீ நீ நீ நீண்ட வரிசையில் நிற்க்கும்போது ஆனந்த் வந்து சேர்ந்தான். பேசிக்கொண்டே உணவு வாங்கிக்கொண்டு அவரவர் சீட்டில் சென்று அமர்ந்தோம். பயணம் துவங்கியது.
நான் வடக்கு நோக்கி அமர, வண்டி தெற்க்கு நோக்கி விரைந்தது. பின்னோக்கி செல்லும் வண்டியில் தலையை திருப்பி ஜன்னலில் வேடிக்கை பார்ப்பது எப்போதுமே எனக்கு பிடிக்காது. அட மடையா... இது ஆர்ட் சினிமாக்களில் குறிப்பால் உணர்த்துவார்களே ...அதுபோல உனக்கு ஏதோ சொல்கிறதே... புரியவில்லையா? என்று ஒரு அசரீரி. ட்யூப் லைட் சற்று லேட்டாக பளிச் சென்று எரிந்தது. கண்ணை மூடினேன். வண்டியுடன் நினைவுகளும் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
3.பைலட் கதிரவனின்- ட்ரைவர் சீட்டு பறி போன சோகக் கதை 😭😭😭
ரயிலில் சேலம் சென்றவுடன் பைக்கிலோ, இல்லை பேருந்திலோ ஏற்காடு செல்லலாம் என்பதுதான் என் திட்டம். பேருந்தில் பயணித்து நாட்கள் ஆகிவிட்டிருந்தன. சந்திப்பிற்க்கு இரண்டு நாட்களுக்கு முன் கதிரிடமிருந்து அழைப்பு.
" மதியம் 12 மணிக்கு சேலத்திலிருந்து உன்னையும் ஆனந்தையும் காரில் ஏற்காடு அழைத்துச் செல்கிறேன்"
பிராஞ்சலியும் இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆஹா .... 😱
சென்னையில் பத்து வருடங்களுக்கு முன் கதிருடன் பயணித்த "நுனி சீட்டு" அனுபவம் நினைவுக்கு வந்தது. ப்ராஞ்சலி முறைத்தாள். அந்த பயணத்தின்போது அவளும் உடன் இருந்தாள்.
யோசித்துவிட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கதிரை அழைத்து ஒரு நிபந்தனை விதித்தேன்.
" நான்தான் கார் ஓட்டுவேன்"
இப்போது வாணி எங்கள் உரையாடலை கேட்டுவிட்டு
" ஒரு நாளைக்கே ஏன் இப்படி பயப்படுறீங்க... ஆனா இன்னும் அதே வண்டி.... அதே முரட்டுத்தனம்தான் நான் வேணும்னா உங்களுக்கு ட்ரைவர் சீட்ட தரச் சொல்லி recommend செய்யிறேன்" என்றார் சிரித்துக் கொண்டே. அப்பாடா ... உயிர் பயம் சற்று விலகியது.
சேலமும் வந்தது. இரட்டையர்கள் கதிரும் சின்னாவும் வந்தனர்.
ஆனால் கதிர் தன் வாழ் நாளில் ட்ரைவர் சீட்டு தவிர வேறு எங்கும் அமர்ந்ததில்லை.
" பரவால்ல வாடா ... நானே ஓட்டறேன்" என அடம்பிடித்தான்.
இவன ஏண்டா pick up பண்ண வந்தோம் என வருந்தியிருப்பான்- மனதிற்க்குள்😡. அனேகமாக இனி அந்த தப்பை செய்ய மாட்டான்.
ஒரு சிறு போராட்டத்திற்க்கு பிறகு அவன் கையிலிருந்து சாவியை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டேன்.
வண்டியை ஸ்டார்ட் செய்து பார்க்கிங்கிலிருந்து வெளியே வருவதற்க்குள் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த கதிர் பதறினான்.
" டேய் டேய் பாத்து பாத்து... எதிர்ல இருக்கற வண்டில இடிக்குது பாரு"
" தம்பி ஸ்பீட் பிரேக்கர்ல மெதுவா ஏறி எறங்கனும்டா" என பாடம் எடுத்தான்.
"இதுக்கே இப்படியா ... நீ ஓட்டுற ஓட்டுக்கு எங்க நிலைமை எப்படி இருந்திருக்கும்னு... இப்ப புரியுதா"
என்பது போல அனைவரும் சிரித்தோம்😂.
வீட்டிலிருந்து புறப்படும்போது பிராஞ்சலி எனக்கு ஒரு warning குடுத்திருந்தாள்.
கதிர் வண்டி ஓட்டக்கூடாது. நான் தான் ஓட்ட வேண்டும். அதற்க்கு evidence அவளுக்கு அனுப்ப வேண்டும் - என்று.
கதிர் க்ளிக் செய்து அனுப்பிய photo தான் நீங்கள் பார்த்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த புகைப்படம்.
மெதுவாக மலை ஏறினோம்.
சர் சர் என பல கார்கள் எங்கள் வண்டியை ( கதிரின் வண்டியை) overtake செய்தன. ச்சே என்ன ஒரு அவமானம் என்று வண்டியே கண்ணீர் விட்டிருக்கும்.
கார்த்தி (Cavin Stay )ஏற்கனவே resort ஐ சென்றடைந்திருந்தான். மற்றவர்கள் பயண்த்தை ஆரம்பித்திருந்தனர். WhatsApp ல் மெசேஜ்கள் வந்த வண்ணமிருந்தன.
4. ஆனந்தின் "விடாமுயற்ச்சி"
காரில் உட்கார்த்ததிலிருந்து ஏற்காடு சென்று சேரும் வரை ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆனந்த் அவனுடைய mobile phone ஐ காரின் Bluetooth உடன் pair செய்ய முயன்று கொண்டிருந்தான்.
"டேய் அந்த பட்டனை அமுக்கு"
" settings உள்ள போடா"
" எல்லாத்தையும் delete பண்ணு ... மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பி"
சின்னா , மலைகளில் மரம் எப்படி முளைக்கிறது, தண்ணீர் எப்படி வருகிறது என காமடி நடிகர் செந்தில் போல ஆராய்ச்சியாளர்களையே கதிகலங்கடிக்கும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஒரு வகையில் Bluetooth மேட்டர் கதிரை busy ஆக வைத்திருக்க உதவியது. ஆனந்தின் அந்த விடா முயற்ச்சி அடுத்த நாள் கீழிறங்கும் போதும் தொடர்ந்தது. ஆனால் கடைசி வரை கதிரின் Bluetooth செவி சாய்க்கவேயில்லை.
5.Let's start the party💥💥💥💥💥
கார்த்தி காத்துக்கொண்டிருந்தான். நாங்கள் சென்றவுடன் நிமிடங்கள் தாமதமின்றி party started. Photos taken. Shared. ம்ம்ம்ம் நிம்மதி😀.
6.Cricket
நல்ல வேளையாக அந்த resort ல் ஒரு சிறிய புல் தரை இருந்தது. "One tip catch " cricket விளையாட சரியான இடம். இந்த ஆட்டத்தின் விதிகள் சற்று வித்தியாசமானவை. அதில் முக்கியமானது. முரட்டுத்தனமாக தூக்கி அடித்தால் out. Resort ஐ சுற்றிலும் காடு. பந்து தொலைந்தால் எடுக்க முடியாது. ஒரே பந்துதான் இருந்தது. விளையாட்டு ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் முரளி, அர்விந்த், சுரேஷ், ராஜாராம், ஜெயேந்திரன், சீகே, ரவி, சரவணக்குமார், நாதன் ... என ஒவ்வொருவராக party ல் - cricket ல் ஐக்கியமானார்கள்.
7.கதிரின் முரட்டு ஆட்டம்
எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ அதை மிகச்சரியாக செய்வதில் கதிர் கெட்டிக்காரன்.
தூக்கி அடித்து - சுவர்களில் பட்டு - out ஆகிக்கொண்டிருந்தான்.
"பாத்துடா வெளியா அடிச்சுடாதடா" என தெரியாமல் யாரோ சொல்லிவிட்டார்கள்.
உங்களுக்கு புரிந்திருக்கும் கதிர் என்ன செய்திருப்பான் என்று.
தோனியாக தன்னை பாவித்து ஓங்கி மட்டையை சுழற்றினான். பந்து காட்டில் காணாமல் போனது.
ஒரே பந்துதான் இருந்தது.
பந்து தொலைந்த காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மதுவை முகர்ந்து பாத்தாலே போதை ஏறிவிடும் கதிர் சில round களுக்கு பிறகு அந்த பந்தை எடுக்க காம்பொண்ட் சுவரின் மீது ஏறி சலங்கை ஒலி கமல் போல நடனமாடிக்கொண்டிருந்தான்.
கலாட்டா தொடரும் ...
No comments:
Post a Comment